தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் பொதுவாக பள்ளிகள் திறக்கப்படும். இந்நிலையில், நோய்த்தொற்றின் காரணமாக இந்த கல்வி ஆண்டின் கால் ஆண்டு ஆரம்பித்தும் அதாவது, ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்தும் இன்னும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மேலும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அதிகம் வெளியாகவில்லை. மேலும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் சூழலைப் பொறுத்து முடிவெடுக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில், இன்று சமூக ஊடகங்கள் மற்றும் சில செய்தி சேனல்களில் நவம்பரில் பள்ளிகள் திற வாய்ப்பு என செய்தி வெளியானது. மேலும், நவம்பர் மாதம் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்து இருப்பதாகவும் சில தகவல்கள் வெளிவந்த நிலையில், இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை மற்றும் முதலமைச்சர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், மேலும் தற்போதைய பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நோய்த்தொற்று சூழல் சரியான பின் பள்ளிகள் திற குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து, நவம்பரில் பள்ளிகள் திறக்கும் என வெளியான தகவல் முற்றிலும் நம்பகத்தன்மை அற்றது மற்றும் போலியானது என்பது தெளிவாகிறது.
Share With Your Friends
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript
Social Plugin