பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 தேர்வு முடிவுகள் வெளியீடுதல் :
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 தேர்வு முடிவுகள் வெளியீடுதல் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது தொடர்பான செய்திக்குறிப்பில்,
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 தொடர்பான தேர்வு முடிவுகள் 10:08:2020 (திங்கள் கிழமை) அன்று காலை 09:30 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி மாதம் வருடத்தினை பதிவு செய்து தங்கள் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இணையதளங்களின் வழியாக அறிந்து கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வுமுடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்புக்கு பதிலாக மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின், 17:08:2020 முதல் 25:08:2020 வரையிலான நாட்களில் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாக குறைதீர்க்கும் படிவத்தினை பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர் வாயிலாக அரசு தேர்வுத் துறையின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் வாயிலாக மாணவர்களுக்கு முடிவுகள் தெரிவிக்கப்படும்.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தல் (Provisional Mark Sheet Download) :
17:08:2020 முதல் 21:02:2020 வரையிலான நாட்களில் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
- என்றவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript
Social Plugin