How To Use The E-Learn Website Of Tamilnadu

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.


Introduction :


வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில், தமிழக பள்ளிக்கல்வித்துறையால் உருவாக்கப்பட்ட இணையவழிக்கல்வி இணையதளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என உங்களுக்கு கூறியுள்ளேன். மேலும், இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களுக்கும் உதவிகரமாக அமையட்டும்.

Why To Use E-Learn :


இன்றைய சூழ்நிலையில், கரோண பாதிப்பின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும், கூடிய விரைவில் திறக்க வாய்ப்பில்லை எனவும் தெரியவருகிறது. எனவே, இதனை கருத்தில் கொண்டே மாணவர்களின் நலனுக்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை இணையவழிக்கல்வி முறையை மேம்படுத்த இவ்விணையத்தை உருவாக்கியுள்ளது. இது மாணவர்களின் கல்விக்கு பயன்படும் எனவும் தெரிவிக்கிறது.

Video Tutorial :


இப்பதிவில் குறிப்பிட்டுள்ளவற்றை காணொளியாக நமது யூடுப் சேனலில் பதிவிட்டுள்ளேன். அதனையும் பார்த்து பயன்பெறுங்கள்.

How To Use e-learn Website :


How To Use The E-Learn Website Of TamilNadu - KalviBot_img.jpg
  1. முதலில், https://e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
  2. பின், மேலுள்ள புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ள படி, Click Here For Content என்பதனை அழுத்துங்கள்.
  3. அதன் பின்னர், உங்கள் வகுப்பு (Class), பாடம் (Subject), மற்றும் நீங்கள் பயிலும் வழி (Medium) ஆகியவற்றை தேர்ந்தெடுங்கள்.
  4. அதன் பின், Search-யை அழுத்துங்கள்.
  5. இப்போது, நீங்கள் தேர்ந்தெடுத்த பாடத்தின் பாடத்தலைப்புகள் திரையில் தோன்றும். அவற்றுள், உங்களுக்கு வேண்டிய பாடத்தலைப்பினை அழுத்துங்கள்.
  6. பின், நீங்கள் அழுத்திய பாடத்துடன் தொடர்புடைய அனைத்து விடீயோக்களும் கீழே Learning Resources என்ற தலைப்பில் தோன்றும். அதில், உங்களுக்கு தேவைப்படுவனவற்றை பாருங்கள்.
  7. மேலும், அப்பாடத்துடன் தொடர்புடைய பயிற்சிகள் ஏதேனும் இருந்தால், அவை Practice Resources என்ற தலைப்பில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். அப்பயிற்சிகளையும் நீங்கள் மேற்கொள்ளலாம்.

Conclusion :


இப்பதிவில், தமிழக பள்ளிக்கல்வித்துறையில் இணையத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து கூறியுள்ளேன். இது உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகிறேன். இது குறித்த உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்து தெரிவிக்கும் பிரிவில் தெரிவியுங்கள். மேலும், இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களுக்கும் உதவிகரமாக அமையட்டும்.

Close Ad