Courses For Maths Group Students After 12th Std In Tamil

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.


COURSES FOR MATHEMATICS GROUP STUDENTS


Introduction

வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில், பன்னிரண்டாம் வகுப்பில் கணிதத்தை முதன்மைப் பாடமாக தேர்ந்தெடுத்து படித்த மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு என்னென்ன படிப்புகள் மேற்கொள்ளலாம் என்பதை விரிவாக தொகுத்து இந்த பதிவில் கொடுத்துள்ளேன். இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என நம்புகிறேன். இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கட்டும்.


1 TECHNICAL COURSES

1.1 ENGINEERING Courses

நீங்கள் ஒரு பொறியாளராக விரும்பினால் பன்னிரண்டாம் வகுப்பு கணிதத்தை முதன்மை பாடமாக தேர்ந்தெடுத்து படித்த நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய படிப்பு இதுதான். இவற்றுள், இளங்கலை படிப்புக்கான காலஅளவு 4 ஆண்டுகள் அதாவது, 8 செமஸ்டர்களை உள்ளடக்கியது. இளங்கலை படிப்புக்குப் பிறகு ஒருவர் வழக்கமாக மேற்கொள்ளக்கூடிய பிஜி படிப்பு ஆன M.Tech என்பதையும் நீங்கள் முடிக்கலாம். மேலும், மேலாண்மை படிப்புகள் ஆன MBA அல்லது சட்ட ரீதியிலான படிப்புகளான LLA ஆகியவற்றையும் நீங்கள் பட்டப் படிப்புக்கு பிறகு மேற்கொள்ளலாம். இங்கே, உங்களுக்கு மிகவும் தெரிந்த அதிகம் பிரபலமான ஒரு சில பொறியியல் படிப்புகளில் வகைகளில் நான் கொடுத்துள்ளேன்.

  • Mechanical Engineering
  • Electrical Engineering
  • Civil Engineering
  • Chemical Engineering
  • Computer Science Engineering
  • IT Engineering
  • IC Engineering
  • EC Engineering
  • Electronics Engineering
  • Electronics and Telecommunication Engineering
  • Petroleum Engineering
  • Aeronautical Engineering
  • Aerospace Engineering
  • Automobile Engineering
  • Mining Engineering
  • Biotechnology Engineering
  • Genetic Engineering
  • Plastics Engineering
  • Food Processing and Technology
  • Agricultural Engineering
  • Dairy Technology and Engineering
  • Agricultural Information Technology
  • Power Engineering
  • Production Engineering
  • Infrastructure Engineering
  • Motorsport Engineering
  • Metallurgy Engineering
  • Textile Engineering
  • Environmental Engineering
  • Marine Engineering
  • Naval Architecture

1.2 DIPLOMA (Engg) Courses

பன்னிரண்டாம் வகுப்பில் கணிதத்தை முதன்மை பாடமாக தேர்ந்தெடுத்து படித்த மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்புக்கு பின் டிப்ளமோ சார்ந்த பொறியியல் படிப்புகளை படிக்கலாம். இப்படிப்புகளுக்கான காலஅளவு மூன்று வருடங்கள் ஆகும். இங்கு நான் சில முக்கியத்துவம் வாய்ந்த டிப்ளமோ சார்ந்த பொறியியல் படிப்புகளை வரிசைப்படுத்தியுள்ளேன். இவற்றில், நான் அனைத்து டிப்ளமோ சார்ந்த படிப்புகளையும் தொகுத்துக் கொடுக்கவில்லை. சில முக்கியத்துவம் வாய்ந்தவற்றை மட்டுமே கொடுத்து இருக்கிறேன்.

  • Diploma in Mechanical Engineering
  • Diploma in Electrical Engineering
  • Diploma in Civil Engineering
  • Diploma in Chemical Engineering
  • Diploma in Mining Engineering
  • Diploma in Computer Science Engineering
  • Diploma in Marine Engineering
  • Diploma in EC Engineering
  • Diploma in IC Engineering
  • Diploma in Metallurgy
  • Diploma in Sound Engineering

2 SCIENCE COURSES

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு முற்றிலும் அறிவியல் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுக்கும் ஆர்வம் உள்ளவராக இருந்தால் நீங்கள் இளங்கலை அறிவியல் படிப்புகளைத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றின் காலஅளவு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகும். பட்டம் பெற்ற பிறகு, பெரும்பாலான மாணவர்கள் பொதுவாக தேர்ந்தெடுக்கும் பிஜி படிப்பான, முதுகலை அறிவியல் படிப்பினை நீங்கள் மேற்கொண்டு முடிக்கலாம். இதுமட்டுமின்றி, MBA மற்றும் LLB போன்ற பிற பிஜி படிப்புகளையும் நீங்கள் மேற்கொள்ளலாம். இங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த சில இளங்கலை அறிவியல் படிப்புகளை நான் தொகுத்துக் கொடுத்திருக்கிறேன்.

  • B.Sc. Agriculture
  • B.Sc. Horticulture
  • B.Sc. Forestry
  • B.Sc. IT
  • B.Sc. Computer Science
  • B.Sc. Chemistry
  • B.Sc. Mathematics
  • B.Sc. Physics
  • B.Sc. Hotel Management
  • B.Sc. Nautical Science
  • B.Sc. Electronics
  • B.Sc. Electronics and Communication
  • B.Sc. Biotechnology

3 LAW COURSES

பன்னிரண்டாம் வகுப்புக்கு பிறகு, நீங்கள் சட்டம் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ளவும் தகுதியுடையவர்கள். எனவே, உங்களுக்கு இப்பிரிவுகள் விருப்பம் இருந்தது என்றால், நீங்கள் சட்டம் சார்ந்த படிப்புகளை மேற்கொள்ளலாம். இதுபோன்ற சட்டம் சார்ந்த படிப்புகளின் குறைந்தபட்ச கால அளவு ஐந்து ஆண்டுகள் ஆகும். இங்கு, சில பிரபலமான சிறப்புமிக்க சட்டம் சார்ந்த படிப்புகளை நான் தொகுத்துக் கொடுத்துள்ளேன்.


  • B.Sc. + LL.B.
  • B.Tech. + LL.B.
  • B.Com. + LL.B.
  • BBA + LL.B.

4 MANAGEMENT COURSES

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த உங்களுக்கு பொறியியல், அறிவியல் மற்றும் சட்டம் சார்ந்த படிப்புகளில் விருப்பம் அதிகம் இல்லை எனில், நீங்கள் மேலாண்மை சார்ந்த படிப்புகளை மேற்கொள்ளலாம். இங்கு, சில அதிக முக்கியத்துவம் வாய்ந்த மேலாண்மை சார்ந்த படிப்புகளை தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

  • BBA (Bachelor of Business Administration)
  • BMS (Bachelor of Management Studies)
  • Integrated BBA + MBA program (5 years)
  • BHM (Bachelor of Hotel Management)
  • Retail Management (Diploma)

5 BACHELOR OF ARCHITECTURE

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புகளில் இதுவும் ஒன்றாகும். இவை, கட்டிடம் கட்டுதல், கட்டிடம் சார்ந்த பொறியியல் ஆகியவற்றை உள்ளடக்கிய இளங்கலை படிப்புகள் ஆகும்.


6 DESIGNING COURSES

பன்னிரண்டாம் வகுப்பு முடித்த அறிவியல் (அ) கணித பிரிவு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் படிப்புகளில் இவையும் ஒன்றாகும். இவை அழகுபடுத்துதல் மற்றும் வடிவமைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். சில, அதிக முக்கியத்துவம் வாய்ந்த பெரிதும் பிரபலமான படிப்புகளை இங்கு கொடுத்திருக்கிறேன்.

  • Bachelor of Interior Designing
  • Bachelor of Design (Accessory)
  • Bachelor of Design (Leather)
  • Bachelor of Textile Design
  • Bachelor of Product Design
  • Furniture and Interior Design course

7 PHYSICAL EDUCATION COURSES

உடற்கல்வி சம்பந்தப்பட்ட படிப்புகள்

  • Bachelor of Physical Education
  • Diploma in Yoga Education
  • Bachelor of Sports Science

8 FASHION COURSES

அழகுபடுத்துதல் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் கையாளுதல் சம்பந்தப்பட்ட படிப்புகள்

  • Bachelor of Fashion Design and Technology
  • Bachelor of Fashion Communication

9 B-PHARMACY

மருந்தகம், மருந்தக மேலாளர் மற்றும் அது சம்பந்தப்பட்ட பிற படிப்புகள்

10 COMMERCIAL PILOT TRAINING

விமானியாக விரும்பும் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய படிப்புகள்

11 OTHER BACHELOR’S DEGREE AND DIPLOMA COURSES

  • B.Com. (Related Fields Like Stats)
  • B Social Work
  • Mass Communication and Journalism
  • Animation and Multimedia
  • Performing Arts
  • Language Courses (To Learn Foreign Languages)
  • Diploma in Retail Management
  • Diploma in Education Technology
  • Diploma in Hotel Management
  • Diploma in Fire Safety and Technology
  • Diploma in Film Making and Video Editing
  • Air Hostess/Cabin Crew training course
  • Diploma in Event Management
  • Bachelor of Statistics
  • BA (Related Fields)
  • CMA (Certified Management Accountant)
  • CA (Chartered Accountancy)
  • Actuarial Science
  • CS (Company Secretary)

12 EDUCATION/TEACHING COURSES

  • B.El.Ed. (Bachelor of Elementary Education, 4 years course)
  • Integrated B.Ed. program
  • Diploma in Elementary Education
  • B.P.Ed. (Bachelor of Physical Education)
  • Primary Teachers Training course
  • Special education courses

Summary

நண்பர்களே முடிவாக இந்த பதிவில், எனக்கு தெரிந்த மற்றும் அதிகம் பிரபலமான பல்வேறு பிரிவுகளில் உள்ள படிப்புகளை தொகுத்து இந்தப்பதிவில் கொடுத்திருக்கிறேன். நான் மேற்கொண்ட சில இணைய தேடல்களில் எனக்கு கிடைத்த முடிவுகள் மற்றும் சில கல்வியாளர்கள் மற்றும் சில நண்பர்களின் மேற்கோள் படி இதனை பதிவிட்டுள்ளேன். இது கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்தால் அது அவர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனவே, நண்பர்களுக்கும் இதனை பகிருங்கள். உங்கள் வருங்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.


Close Ad