
React Yours :
தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில்,
அனைத்து வகுப்புகளுக்குமான பாடப்புத்தகங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்காக இணையத்தில் வெளியிடுவதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், "கொரோனா ஊரடங்கின் காரணமாக 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி" என பள்ளிக்கல்வித்துறை முந்தைய அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்துள்ளது.
மேலும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் எனவும் அறிவிப்பு வெளியாகிவுள்ளது.
எனவே, முதற்கட்டமாக பத்து , பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணாவர்களுக்கான பாடப்புத்தகங்களை இணையத்தில் வெளியிடுவதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Give Ratings For This :
Please Note :
*Use Google Chrome browser for Best Experience
*Make sure to enable Cookies and JavaScript
Social Plugin