தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவ கல்லூரிகள் - மத்திய அரசு அனுமதி

ஆசிரியர்கள் தங்கள் கல்வி படைப்புகளை contactkalvibot@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் (அல்லது) இந்த பக்கத்தில் (Click Here To Upload) பதிவேற்றம் செய்யவும்.

தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவ கல்லூரிகள் - மத்திய அரசு அனுமதி
தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவ கல்லூரிகள் - மத்திய அரசு அனுமதி
React Yours :
ஆறு மருத்துவ கல்லுாரிகளும் 1950 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இதுதவிர அரசு கட்டுப்பாட்டில்,
  1. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி, 
  2. ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவ கல்லுாரி,
  3. சென்னை கே.கே.நகர் - இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லுாரியும் உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக ஆறு மருத்துவ கல்லுாரிகள் துவக்கப்பட உள்ளன.இதுதொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று
  • திருப்பூர்,
  • நீலகிரி,
  • ராமநாதபுரம்,
  • நாமக்கல்,
  • திண்டுக்கல்,
  • விருதுநகர் 
என ஆறு நகரங்களில் மருத்துவ கல்லுாரிகள் அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
ஒவ்வொரு மருத்துவ கல்லுாரியும் தலா 325 கோடி ரூபாய் செலவில் ஆறு மருத்துவ கல்லுாரிகளும் 1,950 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன. மருத்துவ கல்லுாரிகளுக்கான இடங்கள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டதால் விரைவில் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழக அரசின் 23 மருத்துவ கல்லுாரிகள் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று மருத்துவ கல்லுாரிகளில் சேர்த்து 3,600 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
புதிதாக அமையவுள்ள ஆறு மருத்துவ கல்லுாரிகள் செயல்பாட்டுக்கு வந்தால் ஒவ்வொன்றிலும் தலா 150 இடங்கள் என 900 எம்.பி.பி.எஸ். இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

அத்துடன் தமிழக கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிகள் எண்ணிக்கை 32 ஆக உயர்வதுடன் எம்.பி.பி.எஸ். இடங்கள் எண்ணிக்கையும் 4,500 ஆக உயரும்.
இது குறித்து, தமிழக முதல்வர் திரு.பழனிசாமி அவர்கள் :
பிரதமருக்கு நன்றி,
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரி இல்லாத மாவட்டங்களான விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூர், நீலகிரியில் அரசு மருத்துவ கல்லுாரி அமைக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். என் கோரிக்கையை ஏற்று ஆறு மாவட்டங்களிலும் அரசு மருத்துவ கல்லுாரி அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு ஒரே நேரத்தில் ஆறு அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு அனுமதி பெறுவது, ஒரு வரலாற்று நிகழ்வு.இதற்கென 1,950 கோடி ரூபாய் மதிப்பீட்டிற்கு அனுமதி வழங்கி அதில் 1,170 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் பங்காக 780 கோடி ரூபாய் வழங்கப்படும். இதுவரை வரலாறு கண்டிராத சிறப்புமிக்க அனுமதியை வழங்கிய பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் தமிழக மக்கள் சார்பில் நன்றி.
- என கூறியுள்ளார்.
Close Ad