பின்லாந்து நாட்டில் தற்போது பின்பற்றப்பட்டு வரும் கல்வி முறை அங்கு சாத்தியம் என்றால் அந்த முறை இந்தியாவிலும் சாத்தியம் தான், ஆனால் அதற்காக அந்த நாட்டவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பது தான் முக்கியம். பல வருடங்களுக்கு முன்பே எண்ணும், எழுத்தும் இரண்டும் கற்றல் திறனில் போர்ச்சுக்கலுக்கு அடுத்த படியாக தான் பின்லாந்து இருந்தது. ஐரோப்பியாவில் மிகவும் பின்தங்கிய நாடாக பின்லாந்து இருந்தது. பின்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் யோசித்தார்கள் ஏன் நம்முடைய நாட்டில் கல்வி பின்தங்கி இருக்கிறது என்று. பின்தங்கலில் இருந்து மீளுவதற்கு அனைத்து பள்ளிகளும் அரசு செலவில் நடக்கும் பள்ளியாக மாற்ற வேண்டும். பின்லாந்தில் கல்வியை முழுவதும் அரசு பொறுப்பேற்றுக் கொண்டது. Read More >>
Social Plugin