சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் கண்டுபிடிக்கப்பட்டது. லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பிட்டர் எடுத்த புகைப்படத்தில் லேண்டர் விக்ரம் இருப்பது தெரியவந்துள்ளது.
ஆனாலும், இன்னும் லேண்டருடனான தொடர்பு ஏற்படுத்தப்படவில்லை . தொடர்ந்து லேண்டருடன் தொடர்பை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விரைவில் தொடர்பு ஏற்படுத்தப்படும்" என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அவர், தொடர்ந்து 14 நாட்களுக்கு லேண்டரை தொடர்பு கொள்ளும் பணி நடைபெறும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Social Plugin